தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நீண்ட நேரப் பணி: சோர்வில் தரையிலேயே அமர்ந்திருந்த செவிலி!

சத்தீஸ்கரில் நீண்ட நேரமாகக் கவச உடையில் பணியாற்றிய செவிலி, சோர்வில் தரையில் அமர்ந்திருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

viral
போட்டோ வைரல்

By

Published : May 1, 2021, 7:02 AM IST

நாட்டில் கரோனா 2ஆம் அலை உச்சத்தில் உள்ளது. நாள்தோறும் மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். அதிகப்படியான நோயாளிகள் எண்ணிக்கையால் மருத்துவமனைகளில் படுக்கைகளை நிரம்பிவழிகின்றன. ஓய்வு நேரம் இன்றி பிபிஇ உடை அணிந்தபடியே மருத்துவர்கள் அயராது உழைத்துவருகின்றனர்.

இந்நிலையில், சத்தீஸ்கரில் பங்கஜூர் சிவில் மருத்துவமனையில் நீண்ட நேரமாகக் கவச உடையில் பணியாற்றிய செவிலி ஒருவர், சோர்வில் தரையில் அமர்ந்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதைப் பகிரும் ட்விட்டர்வாசிகள், மருத்துவர்கள், செவிலியரின் கஷ்டத்தை புரிந்துகொண்டு, கரோனா விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுங்கள் எனத் தெரிவித்துவருகின்றனர்.

இதையும் படிங்க:ஒடிசா: கரோனா தொற்றால் தம்பதி தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details