தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

போனில் பேசிக் கொண்டே தடுப்பூசி செலுத்திய அலுவலர்! - ஆந்திரா

ஹைதராபாத்: சுகாதாரத்துறை அலுவலர் ஒருவர் போனில் பேசிக் கொண்டே தடுப்பூசி செலுத்தியது போன்ற புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தடுப்பூசி
தடுப்பூசி

By

Published : Apr 11, 2021, 1:38 PM IST

சுகாதாரத்துறை அலுவலர் ஒருவர் போனில் பேசிக் கொண்டே தடுப்பூசி செலுத்தியது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள ஜெகநாதபுரம் ஆரம்ப சுகாதார மையத்தில் இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சமூக வலைதளங்களில் சுகாதாரத்துறை அலுவலரின் செயல் கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. இதற்கு விளக்கம் கேட்டு மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர் ரமணா குமாரி, அந்த சுகாதாரத்துறை அலுவலருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details