தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாலியல் வழக்கில் மாட்டிக்கொண்ட கேரள அமைச்சர்- ஆடியோ வெளியானதால் பரபரப்பு - பாலியல் வழக்கில் மாட்டிக்கொண்ட கேரள அமைச்சர்

கேரள வனத்துறை அமைச்சர் ஏ.கே. சசீந்திரன், அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனை இன்று அவரது இல்லத்தில் சந்தித்தார்.

கேரள அமைச்சர் ஏ கே சசீந்திரன்
கேரள அமைச்சர் ஏ கே சசீந்திரன்

By

Published : Jul 21, 2021, 9:30 PM IST

தேசியவாத காங்கிரஸ் கட்சிப் பிரமுகர் ஒருவர் மீதான பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில் தலையிட்ட சசீந்திரன் பாதிக்கப்பட்ட பெண்ணை, பிரச்னையில் இருந்து பின்வாங்குமாறு அவரது தந்தையிடம் கூறியுள்ளார்.

அந்தத் தொலைபேசி ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையான நிலையில் முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்துள்ளார்.

சர்ச்சைக்குப் பின் முதலமைச்சரை நேரில் சந்தித்த சசீந்திரன்

இந்த சந்திப்புக்குப் பிறகு, தான் முதலமைச்சரை சந்தித்து தான் கூற இருந்ததை தெரிவித்ததாக குறிப்பிட்டார். நாளை கேளர சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற இருக்கும் நிலையில் இந்தப் பிரச்னை சூடுபிடித்துள்ளது.

இதனையடுத்து சசீந்திரன் ராஜினாமா செய்வதாக வதந்தி பரவிய நிலையில், அதுகுறித்து எந்த கருத்தையும் அவர் கூறவில்லை. இந்தப் பிரச்னை தற்போது சூடுபிடித்துள்ள நிலையில், எதிர்க்கட்சியான ஐக்கிய ஜனநாயக முன்னணி அம்மாநில அரசு மீது கடுமையாக குற்றம்சாட்டியுள்ளது.

இதனிடையே நேற்று ஆளுநரிடமும், மகளிர் ஆணையத்திலும் இளைஞர் காங்கிரஸ் கட்சித்தொண்டர்கள் அமைச்சருக்கு எதிராகப் புகார் அளித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து விசாரிக்க தேசியவாத காங்கிரஸ் கட்சி விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்துள்ளது.

இதையும் படிங்க:'நளினி, முருகன், சாந்தன் முன்விடுதலை கோரி மனு'

ABOUT THE AUTHOR

...view details