தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பெட்ரோல் விலை உயர்வு : 'வரி வசூலில் பிஹெச்டி' என ராகுல் நையாண்டி!

ஒன்றிய அரசு வருமான வரி, கார்ப்பரேட் வரிகளைவிட பெட்ரோல், டீசலில் இருந்து அதிக வருமானம் ஈட்டுவதாக காங்கிரஸ் கட்சி எம்.பி., ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ராகுல் நையாண்டி
ராகுல் நையாண்டி

By

Published : Jun 20, 2021, 5:46 PM IST

Updated : Jun 20, 2021, 7:15 PM IST

டெல்லி:பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் எம்.பி.,ராகுல் காந்தி, ஒன்றிய அரசை தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து, வரிவசூலில் பிஹெச்டி என குறிபிட்டுள்ளார். தொடர்ந்து, ஒன்றிய அரசு வருமான வரி , கார்ப்பரேட் வரிகளை விட பெட்ரோல் டீசலில் இருந்து அதிக வருமானம் பெருகிறது எனத் தலைப்பிடப்பட்ட இந்தி பத்திரிக்கை செய்தி ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

சில நாட்களுக்கு நிலையாக இருந்த பெட்ரோல் டீசல் விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. பெட்ரோல் தற்போது 1 லிட்டர் ரூ.100- ஐ தொட்டுள்ளது. சில நகரங்களில் ரூ.100-ஐ கடந்துள்ளது. பெட்ரோல் அதிகபட்சமாக, போபாலில் 1 லிட்டர் ரூ. 105.43 க்கும், டீசல் ரூ.96.65க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அடுத்தப்படியாக மும்பையில் 1 லிட்டர் பெட்ரோல் ரூ.103.36 க்கும், டீசல் ரூ.95.44க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பாட்னாவில் பெட்ரோல் , டீசல் முறையே ரூ.99.28க்கும், 93.30க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நாட்டின் தலைநகர் டெல்லியில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 97.22 ரூபாய்க்கும், டீசல் 87.97 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க:உத்தரகாண்டில் ஊரடங்கு நீட்டிப்பு - வாரத்தில் 5 நாட்கள் கடை திறக்கலாம்

Last Updated : Jun 20, 2021, 7:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details