உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு குறைந்தப்பாடில்லை. தினந்தோறும் லட்சகணக்கான மக்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், முதற்கட்டமாக, முன்களப்பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன. பல நாடுகளில் அவசரக் கால சிகிச்சைக்கு பைசர், மாடர்னா தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தியாவிலும் எமர்ஜென்சி நேரத்தில் ஃபைசர் தடுப்பூசியை பயன்படுத்த அந்நிறுவனம் விண்ணப்பித்திருந்தது.
இந்நிலையில், ஃபைசர் கரோனா தடுப்பூசியை உபயோகிப்பதற்காக விண்ணப்பித்த படிவத்தை அந்நிறுவனம் திரும்ப பெற்றுள்ளது. கடந்த பிப்.3 ஆம் தேதி இந்திய மருந்து ஒழுங்குமுறை ஆணைய குழுவுடன் நடைபெற்ற கூட்டத்தின் பிறகு, ஃபைசர் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது. அதே சமயம், எதிர்காலத்தில் ஒப்புதல் விண்ணப்பத்தை கூடுதல் தகவல்களுடன் சமர்ப்பிப்போம் எனவும் அந்நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:'கைது செய்த பத்திரிக்கையாளர்களை விடுவியுங்கள் - ரஷ்யாவிடம் சிபிஜே வலியுறுத்தல்!