தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிகாரில் 2 இடங்களில் கச்சா எண்ணெய் இருப்பு குறித்து ஆய்வு செய்ய அரசு அனுமதி! - பீகாரில் கச்சா எண்ணெய் இருப்பு

பிகார் மாநிலத்தில் இரண்டு இடங்களில் கச்சா எண்ணெய் இருப்பு குறித்து கண்டறியப்பட்டுள்ளதையடுத்து அங்கு ஆய்வு மேற்கொள்ள ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

பீகாரில் 2 இடங்களில் கச்சா எண்ணெய் இருப்பு குறித்து ஆய்வு செய்ய அரசு அனுமதி
பீகாரில் 2 இடங்களில் கச்சா எண்ணெய் இருப்பு குறித்து ஆய்வு செய்ய அரசு அனுமதி

By

Published : Jun 7, 2022, 10:52 PM IST

பாட்னா (பிகார்): பிகாரில் உள்ள பக்சர் மற்றும் சமஸ்திபூர் மாவட்டங்களில் அதிக அளவில் கச்சா எண்ணெய் இருப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் இருப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ள பிகார் அரசு ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

பக்சர், சமஸ்திபூர் பகுதிகளில் கங்கை நிதிக்கரையோரம் பெட்ரோலியப் பொருட்கள் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஓஎன்ஜிசி நிறுவனத்துடன் இணைந்து அப்பகுதிகளில் விரைவில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது என பக்சர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. சுரங்கம் தோண்டி ஆய்வு மேற்கொள்ள துறை சார்ந்த அனுமதி இன்னும் கிடைக்கவில்லை, அனுமதி கிடைத்தவுடன் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கச்சா எண்ணெய் இருப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 2017-2018ஆம் ஆண்டில் சிவான், பூர்னியா மற்றும் பக்சர் மாவட்டங்களில் எண்ணெய் வயல்களின் சாத்தியம் குறித்து ஆராயப்பட்டது. சிம்ரி கிராமத்தில் முகாம் அமைத்து ராஜ்பூர், ரகுநாத்பூரில் பகுதிகளில் கங்கை நதியோரம் உள்ள இடங்களில் நிலம் தோண்டி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த மாதிரிகள் ஹைதராபாத்தில் உள்ள சோதனை ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன. ஆனால் பிற்காலத்தில் ஆய்வு கைவிடப்பட்டது.

சமஸ்திபூர் எம்.பி. நித்யானந்த் ராய் பேசுகையில், "ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு ஆய்வு மேற்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சமஸ்திபூரின் கங்கை நதிக்கரையோரம் உள்ள பகுதிகளில் கச்சா எண்ணெய் இருப்பு இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சமஸ்திபூரில் 308 கி.மீ., சதுர பரப்பளவில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் எண்ணெய் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. சாதகமான முடிவு கிடைத்தால், அடுத்தகட்ட பணிகள் நடைபெறும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: நூபுர் ஷர்மா மீது 5 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு

ABOUT THE AUTHOR

...view details