தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மும்பையில் சதத்தைத் தொட்ட பெட்ரோல் விலை! - பெட்ரோல் விலை

மும்பையில் இன்று (மே.31) பெட்ரோல் லிட்டருக்கு 100. 47 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Mumbai
Mumbai

By

Published : May 31, 2021, 1:18 PM IST

நாடு முழுவதும், கரோனா தொற்று தீவிரமாகப் பரவி வருகிறது. வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த, பெரும்பாலான மாநிலங்களில் ஊடரங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கடந்த சில நாள்களாகப் பெட்ரோல், டீசல் விற்பனை விலை தொடர்ந்து சரிந்தது. இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்து வருகிறது.

இந்நிலையில், மும்பை மற்றும் போபாலில் பெட்ரோல் விலை லிட்டர் 100 ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

பெட்ரோல் விலை விவரம்

  • மும்பையில் பெட்ரோல் லிட்டர் 100.47 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 92.45 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மத்திய பிரதேசத்திலுள்ள போபாலில், பெட்ரோல் லிட்டர் 102.34 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 93.37 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
  • டெல்லியில் பெட்ரோல் லிட்டர் ஒன்றிற்கு 29 பைசாக்கள் உயர்ந்து, 94.23 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் ஒன்றிற்கு 26 பைசாக்கள் உயர்ந்து 85.15 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
  • கொல்கத்தாவில் பெட்ரோல் லிட்டர் 94.25 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 87.74 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாநிலங்களின் மதிப்புக் கூட்டு வரியைப் பொறுத்து, பெட்ரோல், டீசல் விலையில் வேறுபாடு காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:திருப்பதி லட்டு டோர் டெலிவரி போலி விளம்பரம்: இணையதளம் மீது வழக்கு பதிவு

ABOUT THE AUTHOR

...view details