டெல்லி: நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏழாவது நாளாக அதிகரித்துள்ளது. அதன்படி, டெல்லியில் பெட்ரோல் 30 காசுகள் உயர்ந்து லிட்டர் 104 ரூபாய் 44 காசுகளுக்கும், டீசல் 35 காசுகள் உயர்ந்து லிட்டர் 93 ரூபாய் 17 காசுகளுக்கும் விற்பனையாகிறது.
மும்பையில், பெட்ரோல் 29 காசுகள் உயர்ந்து லிட்டர் 110 ரூபாய் 41 காசுகளுக்கும், டீசல் 37 காசுகள் உயர்ந்து லிட்டர் 101 ரூபாய் மூன்று காசுகளுக்கும் விற்பனையாகிறது.