சென்னை:இந்தியாவில் ஐந்து மாநில தேர்தல் நடைபெற்ற நேரத்தில் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை 137 நாள்களாக மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், ஐந்து மாநில தேர்தல் முடிவு வெளிவந்த பிறகு, மார்ச் 22ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. அந்த வகையில், 16ஆவது நாளாக இன்றும் (ஏப்ரல் 5) பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக இந்தியாவில் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதன்படி, இன்றைய பெட்ரோல் விலை டெல்லியில் லிட்டருக்கு ரூ.105.41 காசு ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 96.67 காசு ஆகவும் உள்ளது. நேற்று பெட்ரோல் விலை ரூ.104.61 காசு ஆகவும், டீசல் விலை ரூ.95.87காசு ஆகவும் இருந்தது.
அந்த வகையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு தலா 80 காசுகள் உயர்த்தப்பட்டது. இதனிடையே, கடந்த 16 நாட்களில் மொத்தமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்ந்துள்ளது.