சென்னை:சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன.
சில நாள்களுக்கு முன் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்தது. இதனையடுத்து பெட்ரோல், டீசல் விலை குறைந்தது. இந்நிலையில், விலையில் மாற்றம் ஏதும் இல்லாமல் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 காசுகளுக்கும், டீசல் லிட்டருக்கு ரூ.94.24 காசுகளுக்கும் இன்று (ஜூன் 1) விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல், டீசலின் தொடர்ந்து 11ஆவது விலையில் இன்றும் எந்த மாற்றமுமில்லை.
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு மே 21 அன்று குறைத்த நிலையில், 45 நாள்களுக்கு பின் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டது. மேலும், சமையல் சிலிண்டர் விலை மே 7ஆம் தேதி ரூ.50 உயர்ந்த நிலையில், மே19ஆம் தேதி மீண்டும் சமையல் எரிவாயு விலை ரூ.3 உயர்ந்தது. அதேபோல், வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.8 உயர்ந்து விற்பனையாகி வருகிறது.
- டெல்லியில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.96.72க்கும், டீசல் ரூ.89.62க்கும் விற்பனையாகிறது.
- மும்பையில் பெட்ரோல் ரூ.111.35க்கும், டீசல் ரூ.97.28க்கும் விற்பனையாகிறது.
- கொல்கத்தாவில் பெட்ரோல் ரூ.106.03க்கும், டீசல் ரூ.92.76க்கும் விற்பனையாகிறது.
இதையும் படிங்க:பெட்ரோல், டீசல் விலை குறைப்பு போதாது - ஓட்டுநர்கள் கருத்து!