இது குறித்து எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தின் உயரதிகாரி கூறுகையில் சர்வதேச நிலையில் திடீரென உயர்ந்த டாலர் மதிப்பின் விளைவாக இந்த சிக்கல் ஏற்பட்டதாகவும் , இது தற்காலிகமானது எனவும் சிறிது நாட்களில் நிலைமை இயல்புக்கு திரும்பும் எனவும் தெரிவித்தார்.
டாலர் மதிப்பில் ஏற்ற இறக்கம்! பெட்ரோல். டீசல் விநியோகத்தில் சிக்கல் - fluctuating dollar price
டாலர் மதிப்பில் ஏற்ற இறக்கம் காரணமாக , எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து நாடு முழுவதும் உள்ள விநியோகஸ்தர்களுக்கு பெட்ரோல், டீசல் எரிபொருள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
டாலர் மதிப்பில் ஏற்ற இறக்கம் மற்றும் மாநிலங்களில் உயர்த்தப்பட்ட பெட்ரோல் , டீசல் மீதான வாட் வரியின் காரணமாக, எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து நாடு முழுவதும் உள்ள விநியோகஸ்தர்களுக்கு பெட்ரோல், டீசல் எரிபொருள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது சரி செய்யப்படவில்லை என்றால் விளைவு நீடித்த ஒன்றாக இருக்கும் என எரிபொருள் உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள 496 பெட்ரோல் நிலையங்களில் பல நிலையங்கள் பெட்ரோல் தட்டுப்பாடு காரணமாக மூடப்பட்டுள்ளன. மத்திய பிரதேச மாநிலம் போபாலிலும் இதே நிலைமை தான். ராஜஸ்தான் மாநிலத்தில் 2000க்கும் மேற்பட்ட நிலையங்களில் தட்டுப்பாடு நிலவுகிறது. இப்பிரச்சனைக்கு மத்திய அரசு விரைவில் தீர்வு காண வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.