தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தை விதிகளைத் திரும்பப் பெறக்கோரி மனு - புதுச்சேரி மாநில செய்திகள்

புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தை விதிகளைத் திரும்பப்பெறக் கோரி அனைத்துக்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் மாநில தேர்தல் ஆணையரிடம் மனு அளித்தனர்.

புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகளை திரும்பபெறக்கோரி மனு
புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகளை திரும்பபெறக்கோரி மனு

By

Published : Oct 14, 2021, 9:19 AM IST

புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதில் வார்டு வரையறை செய்வதில் குளறுபடி உள்ளதாகக் கூறி திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்யப்பட்டது.

அதன்பேரில், தேர்தலை வரும் 21ஆம் தேதி வரை நிறுத்திவைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகளைத் திரும்பப் பெறக்கோரி என்ஆர் காங்கிரஸ், பாஜக, திமுக, காங்கிரஸ், சுயேச்சை உள்ளிட்ட அனைத்துக் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் மாநில தேர்தல் ஆணையரைச் சந்தித்து மனு அளித்துள்ளனர்.

இதையும் படிங்க:தமிழ்நாடு - கேரள நதி நீர்ப் பங்கீடு குறித்து ஸ்டாலின் இறுதி முடிவு எடுப்பார் - அமைச்சர் சாமிநாதன்

ABOUT THE AUTHOR

...view details