தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பொதுத்துறை நிறுவனங்களும் தடுப்பூசி தயாரிக்க முன் வரவேண்டும்! - டெல்லி

டெல்லி: பொதுத்துறை நிறுவனங்களும் தடுப்பூசி தயாரிக்க முன்வரவேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் இன்று (ஜூன் 2) பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பொதுத்துறை நிறுவனங்களும் தடுப்பூசி தயாரிக்க முன்வரவேண்டும் - உச்ச நீதிமன்றத்தில் மனு
பொதுத்துறை நிறுவனங்களும் தடுப்பூசி தயாரிக்க முன்வரவேண்டும் - உச்ச நீதிமன்றத்தில் மனு

By

Published : Jun 3, 2021, 1:46 AM IST

செங்கல்பட்டிலுள்ள HLL BIOTECH பொதுத்துறை நிறுவனத்தை கரோனா தடுப்பூசி தயாரிக்க, மாநில அரசிடம் ஒப்படைக்கக்கோரி இன்று(ஜூன் 2) உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் மக்களின் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. மறுபுறம் தடுப்பூசிகள் பற்றாக்குறையும் பெருகிவருகிறது.

ஒன்றிய அரசு முன்வர வேண்டும்

கரோனா தடுப்பூசிகளான COVI SHIELD மற்றும் COVAXIN ஆகிய இரண்டையும் தயாரிப்பதற்கான உரிமையை தனியார் நிறுவனங்களான SERUM INSTITUTE OF INDIA , BHARATH BIOTECH-க்கு ஒன்றிய அரசு வழங்கியுள்ளது. இந்திய மொத்த மக்கள் தொகைக்கான தடுப்பூசி தேவையை இவ்விரண்டு நிறுவனங்களால் மட்டும் பூர்த்திசெய்யமுடியாது.

அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒன்றிய அரசால் தொடங்கப்பட்ட ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகம் (HLL Biotech) கடந்த ஒன்பது ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது. மேலும் இந்தியாவில் தடுப்பூசி தயாரிக்கும் நிலையிலுள்ள பொதுத்துறை நிறுவனங்களில் தடுப்பூசி தயாரிக்க ஒன்றிய அரசு முன்வர வேண்டும்.

பொதுத்துறை நிறுவனங்களும் தடுப்பூசி தயாரிக்க முன்வரவேண்டும் - உச்ச நீதிமன்றத்தில் மனு

அதனடிப்படையில் கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

1. செங்கல்பட்டிலுள்ள ஒன்றிய அரசால் தொடங்கப்பட்ட ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தை (HLL Biotech) தடுப்பூசி தயாரிக்க தமிழ்நாடு அரசிடம் குத்தகை முறையில் ஒப்படைக்க வேண்டும்.

2. இந்தியாவிலுள்ள மொத்தம் ஏழு பொதுத்துறை, 14 தனியார் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களை தடுப்பூசி தயாரிக்க அனுமதி வழங்க வேண்டும்.

3. இந்தியா இன்று எதிர்கொண்டுள்ள பேரிடர் நெருக்கடியை சமாளிக்க BHARATH BIOTECH மற்றும் ICMR-இடமுள்ள தடுப்பூசி தயாரிப்பதற்கான உரிமத்தை பொதுமைப்படுத்தி தடுப்பூசி தயாரிக்கும் அனைத்து பொதுத்துறை, தனியார் நிறுவங்களுக்கு வழங்க வேண்டும்.

ABOUT THE AUTHOR

...view details