தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Video - லிஃப்டில் வந்த சிறுவனை கடித்த வளர்ப்பு நாய் - வைரல் வீடியோ

லிஃப்டில் இருந்த சிறுவனை வளர்ப்பு நாய் கடிக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

லிஃப்டில் வந்த சிறுவனை கடித்த வளர்ப்பு நாய் வைரல் வீடியோ
லிஃப்டில் வந்த சிறுவனை கடித்த வளர்ப்பு நாய் வைரல் வீடியோ

By

Published : Sep 6, 2022, 8:27 PM IST

காஸியாபாத்: உத்தரப்பிரதேச மாநிலம், காஸியாபாத்தில் லிஃப்டில் இருந்த பெண்ணின் வளர்ப்பு நாய் அங்கு வந்த சிறுவனைக் கடித்தது. ஆனால், நாயின் உரிமையாளரான அப்பெண் சிறுவனைக் காப்பாற்றாமல் அமைதியாக நின்றுள்ளார். இதன் சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலானது.

அந்த வீடியோவில், நாயின் உரிமையாளர் பார்த்துக்கொண்டிருந்தபோதே வளர்ப்பு நாய் ஒன்று குழந்தையின் மீது பாய்ந்து கடிப்பது பதிவாகியுள்ளது. இந்தச்சம்பவம் நேற்று (செப். 5) காஸியாபாத்திலுள்ள ராஜ்நகரில் அமைந்துள்ள சார்ம்ஸ் கேஸில் சொசைட்டியில் நடந்துள்ளது.

லிஃப்டில் வந்த சிறுவனை கடித்த வளர்ப்பு நாய் வைரல் வீடியோ

வளர்ப்பு நாயானது அந்தச்சிறுவனை கடிக்கும்போது, அந்தப்பெண் சிறுவனுக்கு உதவாமல், எதுவுமே செய்யாமல் அங்கேயே நின்றுள்ளார். இதுகுறித்து சிறுவனின் தந்தை அளித்தப்புகாரின் அடிப்படையில் காஸியாபாத் காவல் துறையினர், நாயின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:கழுதைப்பண்ணை மூலம் லட்சக்கணக்கில் வருவாய் ஈட்டும் ஐடி ஊழியர்

ABOUT THE AUTHOR

...view details