புதுச்சேரி : கரோனா பாதிப்பு குறைந்து வருவதால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டு வந்தது. கடந்த முறை அக்டோபர் 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக புதுச்சேரி அரசு அறிவித்த நிலையில் கடைகள், வணிக நிறுவன ஊழியர்கள் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தியதை உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
மேலும், கடற்கரை சாலை, பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள் அனைத்தும் அனைத்து நாள்களும் வழக்கமான நேரங்களில் முழுமையாக திறந்திருக்கலாம்.அனைத்து வழிபாட்டு தலங்களும் இரவு 10 மணி வரை திறந்திருக்கும் உள்ளிட்ட பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஊரடங்கு இன்று முடிவடையவுள்ள நிலையில் நவம்பர் 15ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டித்து புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. அதன்படி, இரவு நேர ஊரடங்கு இரவு 11 மணி முதல் மறுநாள் காலை 5 மணி வரை அமலில் இருக்கும், இருப்பினும் பண்டிகை சார்ந்த விற்பனைகளுக்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.