தமிழ்நாடு

tamil nadu

ஜே.பி. நட்டாவின் பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல் : கொதித்த சிந்தியா - கலாய்த்த மம்தா பானர்ஜி!

போபால் : பாஜகவின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவின் பாதுகாப்பு வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு, அடுத்து நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் பாடம் கற்பிப்பார்கள் என மத்தியப் பிரதேச மாநிலங்களவை உறுப்பினர் ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார்.

By

Published : Dec 11, 2020, 11:00 PM IST

Published : Dec 11, 2020, 11:00 PM IST

ஜே.பி. நட்டாவின் பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல்
ஜே.பி. நட்டாவின் பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல்

மேற்கு வங்கத்தில் உள்ள டைமண்ட் ஹார்பர் பகுதியில் பாஜக சார்பில் நேற்று (டிச.10) பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க கொல்கத்தாவிலிருந்து, தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள டைமண்ட் ஹார்பர் நகருக்கு வந்தடைந்த ஜே.பி.நட்டாவின் பாதுகாப்பு வாகனம் மீது மர்ம நபர்களால் கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. சிராகோல் எனும் இடத்தில் நடந்த இத்தாக்குதலில் நட்டாவின் பாதுகாப்பு வாகனத்தின் கண்ணாடி நொறுங்கியது.

அதிர்ஷ்டவசமாக, இந்தச் சம்பவத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு எந்த விதமான காயமும் ஏற்படவில்லை. இந்த தாக்குதலை திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் தான் நடத்தியதாக பாஜக வட்டாரங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு மத்திய பிரதேச மாநிலங்களவை உறுப்பினர் ஜோதிராதித்யா சிந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது அதிகாரப்பூர்வமான ட்விட்ட்ர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், “ பாஜகவின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவின் பாதுகாப்பு வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு, அடுத்து நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் பாடம் கற்பிப்பார்கள். மேற்கு வங்க மாநிலத்தில் தற்போது சட்டம் ஒழுங்கும் இல்லை, சகிப்பு தன்மையும் இல்லை. மாநிலத்தில் நிர்வாகம் முற்றிலும் தோல்வி அடைந்து, குண்டர்கள் ஆட்சி நடக்கிறது.

இதனை வழிநடத்தி வரும் மம்தா பானர்ஜியின் ஆட்சி விரைவில் தூக்கி எறியப்படும்” என்றார்.

ஜே.பி. நட்டாவின் பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல் : கொதித்த சிந்தியா, கலாய்த்த மம்தா பானர்ஜி!

பாஜகவினரின் இந்த குற்றச்சாட்டிற்கு பதிலளித்த மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, “ஜே.பி.நட்டாவின் பாதுகாப்பு வாகனம் மீது கற்களை வீசித் தாக்கினார்கள் என பாஜக நாடகமாடுகிறது. பேரணிக்குக் கூட்டம் சேரவில்லை என்பதால் திசை திருப்புகிறார்கள்” என கேலி செய்துள்ளார்.

இதையும் படிங்க :மகாராஷ்டிாவில் அரசு ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிப்பு!

ABOUT THE AUTHOR

...view details