தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாஜகவால் தெலங்கானாவில் காலூன்ற முடியாது - ஓவைசி - ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல்

ஹைதராபாத்: தெலங்கானாவில் தடம்பதிக்க நினைக்கும் பாஜகவின் முயற்சிகளை மாநில மக்கள் முறியடிப்பார்கள் என்று ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.

ஓவைசி
ஓவைசி

By

Published : Dec 5, 2020, 11:26 AM IST

தெலங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாத் மாநகராட்சியின் 150 வார்டுகளுக்கான தேர்தல் டிசம்பர் 1ஆம் தேதி நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் டிசர்பர் 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா, அக்கட்சியின் மூத்தத் தலைவரும் உள் துறை அமைச்சருமான அமித் ஷா, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டனர்.

தேர்தல் முடிவில், தெலங்கானாவின் ஆளும் கட்சியான தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி 55 வார்டுகளிலும், பாஜக 48 இடங்களிலும், ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 44 இடங்களில் வென்றுள்ளன. தேர்தல் களத்தில் தொடர் தோல்விகளைச் சந்தித்துவரும் காங்கிரஸ் இந்தமுறையும் வெறும் இரண்டு வார்டுகளில் மட்டுமே வெற்றிபெற்றது.

இந்நிலையில், தேர்தல் வெற்றி தொடர்பாக பேசியுள்ள ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி, "மாநகராட்சித் தேர்தலில் நாங்கள் 44 இடங்களில் வெற்றிபெற்றுள்ளோம். தெலங்கானாவில் தடம்பதிக்க நினைக்கும் பாஜகவின் முயற்சிகளை மாநில மக்கள் முறியடிப்பார்கள்.

பாஜகவை நாங்கள் ஜனநாயாக ரீதியாக எதிர்கொள்கிறோம். மாநகராட்சித் தேர்தலில் வெற்றிபெற்றவர்களைத் தொடர்புகொண்டு மக்கள் பணிகளை இன்றுமுதலே தொடங்குங்கள் என்று அறிவுறுத்தியுள்ளேன்" என்றார்.

2016 நடைபெற்ற மாநகராட்சித் தேர்தலில் வெறும் 4 இடங்களை மட்டுமே வென்ற பாஜக இந்தத் தேர்தலில் 48 இடங்களில் வெற்றிபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஹைதராபாத் தேர்தல்... பாஜக அசுர வளர்ச்சி: 'பாக்யா நகர்' வாக்காளர்களுக்கு யோகி நன்றி!

ABOUT THE AUTHOR

...view details