ஜம்மு: காங்கிரஸ் கட்சின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான குலாம்நபி ஆசாத், அண்மையில் காங்கிரசிலிருந்து விலகினார். காங்கிரஸ் தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, 50 ஆண்டுகளாக காங்கிரசில் இருந்த அவர், அதிலிருந்து வெளியேறினார்.
காங்கிரஸ் தனது வீடு என்றும் அதிலிருந்து தனது நண்பர்களால் வெளியேற்றப்பட்டதாகவும் குலாம்நபி ஆசாத் தெரிவித்திருந்தார். காங்கிரசிலிருந்து விலகிய அவர், பாஜகவில் இணைவார் என பேசப்பட்ட நிலையில், தனி அரசியல் கட்சியை தொடங்கப்போவதாக ஆசாத் அறிவித்தார். இதையடுத்து, அவருக்கு ஆதரவாக ஏராளமானோர் காங்கிரசிலிருந்து விலகினர்.
இந்த நிலையில், ஜம்முவில் நடைபெற்ற அரசியல் பொதுக்கூட்டத்தில் குலாம் நபி ஆசாத் கலந்து கொண்டு உரையாற்றினார். அவரது புதிய கட்சி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனது கட்சிக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை என ஆசாத் தெரிவித்தார்.