தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜெகதீஷ் ஷட்டரை மக்கள் தோற்கடிக்க வேண்டும் - எடியூரப்பா வேண்டுகோள்

பாஜகவில் இருந்து காங்கிரஸூக்கு தாவிய ஜெகதீஷ் ஷட்டரை மக்கள் தோற்கடிக்க வேண்டும் என, கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா வலியுறுத்தியுள்ளார்.

Yediurappa
எடியூரப்பா

By

Published : Apr 26, 2023, 9:44 PM IST

ஹூப்ளி: கர்நாடகாவில் மே 10ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்டப் பல்வேறு கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் ஹூப்ளி-தார்வார்டு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் மகேஷ் தெஞ்சினாகைக்கு ஆதரவாக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா பரப்புரை செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''வரும் தேர்தலில் ஜெகதீஷ் ஷட்டரை நாம் தோற்கடிக்க வேண்டும். பாஜகவுக்கு துரோகம் இழைத்தவர்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என நம்புகிறேன். கட்சியில் அனைத்து பதவிகளை வழங்கிய பிறகும், ஜெகதீஷ் ஷட்டர் பாஜகவை முதுகில் குத்திவிட்டார். அவருக்கு தகுந்த பாடத்தை கற்பிக்க வேண்டும். காங்கிரஸ் ஒரு மூழ்கும் கப்பலாக உள்ளது" எனக் கூறினார்.

இதைத் தொடர்ந்து அதானி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் மகேஷ் குமத்தல்லியை ஆதரித்து எடியூரப்பா பிரசாரம் செய்தார். அப்போது மக்கள் மத்தியில் பேசிய அவர், "ஜெகதீஷ் ஷட்டரை தோற்கடிக்க வேண்டிய பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அதானி தொகுதி மக்கள், லட்சுமண் சவதியை தோற்கடிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்வது அவசியம். ஏனென்றால் அவர் பாஜகவுக்கு பெரும் மோசடியை இழைத்துவிட்டார்" என விமர்சித்தார்.

இதற்கிடையே, 2012ம் ஆண்டு எடியூரப்பா கேஜேபி என்ற கட்சியை தொடங்கியது ஏன் என, ஜெகதீஷ் ஷட்டர் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்குப் பதில் அளித்த எடியூரப்பா, "பாஜகவில் இருந்து விலகி கேஜேபி என்ற கட்சியை தொடங்கி, பெரும் தவறை செய்தேன். ஆனால், அதற்காக மக்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொண்டேன். பாஜகவில் இருந்து விலகிய பின்புதான் தனிக்கட்சியைத் தொடங்கினேன். ஆனால், ஷட்டரை போல் காங்கிரஸில் இணையவில்லை" என்றார்.

இந்நிலையில் எடியூரப்பாவின் குற்றச்சாட்டுக்குப் பதில் அளித்துள்ள ஜெகதீஷ் ஷட்டர், "பாஜகவில் இருந்து ஏராளமானோர் விலகி, காங்கிரஸில் இணைந்துள்ளனர். ஆனால், என்னை மட்டுமே குறி வைக்கின்றனர். என் மீதான எடியூரப்பாவின் விமர்சனத்தை, வாழ்த்தாகவே பார்க்கிறேன். நான் தோற்பேன் என அவர் கூறினால், அதை வெற்றியாக மாற்றுவேன்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: Amartya Sen: அமர்த்தியா சென் விவகாரத்தில் இனி தர்ணா தான்.. முதலமைச்சர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details