புதுச்சேரியில் மதுபான கடைகள் திறப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே முத்தியால்பேட்டை பகுதியில் குடியிருப்புகளின் அருகே புதிதாக மதுபானம் மற்றும் சூதாட்ட நடன பார் அமைக்கப்பட்டுள்ளது. அதை அகற்ற கோரியும், அனுமதியை அரசு திரும்ப பெற கோரியும், கடந்த 11ஆம் தேதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் மதுபானக்கடை மற்றும் சூதாட்ட நடன கிளப் திறக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் மீண்டும் நேற்று (டிச.23) இரவு மதுபான கடையை திறக்க முயற்சி நடந்துள்ளது. இதனை அறிந்த பொதுமக்கள், அதிமுக முன்னாள் எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் தலைமையில் திடீரென மதுக்கடை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.