தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'பிகாரில் ஆட்சி மாற்றம் தேவை'- ஹர்திக் பட்டேல்!

பிகார் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்; அங்கு ஆட்சி மாற்றம் தேவை என காங்கிரஸ் இளம் தலைவர் ஹர்திக் பட்டேல் கூறினார்.

By

Published : Oct 23, 2021, 10:34 AM IST

Hardik Patel
Hardik Patel

பாட்னா : பிகார் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு சேகரிக்கும் பொருட்டு அக்கட்சியின் இளம் தலைவர்களான ஹர்திக் பட்டேல், கனையா குமார், ஜிக்னேஷ் மேவானி ஆகியோர் மாநிலத் தலைநகர் பாட்னாவில் முகாமிட்டுள்ளனர்.

இந்நிலையில், ஹர்திக் பட்டேல் ஈடிவி பாரத் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், “குஜராத்தில் காண்பதை பிகாரிலும் காண்கிறேன். இந்த இரு மாநிலங்களும் ஒன்று. இங்கு ஆட்சி மாற்றம் அவசியம்.

இந்த இரு மாநிலங்களில் ஆட்சிக்கு வர காங்கிரஸ் முயற்சிகள் மேற்கொண்டுவருகிறது. நாங்கள் பிகாரில் 2 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறோம். வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. தேர்தலை பொருத்தவரை அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிட உரிமை உண்டு” என்றார்.

பிகாரில் காலியாகவுள்ள தாராபூர் மற்றும் குசேஷ்வர் அஸ்தான் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அக்.30ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலானது காலை 6 மணிக்கு தொடங்கி மாலை 7.30 மணிக்கு நிறைவடைகிறது. நவம்பர் 2ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதையும் படிங்க : பிகாரில் மகா கூட்டணி முறிவு ஏன்? கனையா குமார் பதில்!

ABOUT THE AUTHOR

...view details