போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டம் சோஹாகி அருகே நள்ளிரவில் பேருந்தும் லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். 39 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடல்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து போலீசார் தரப்பில், தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் இருந்து கோரக்பூர் நோக்கி சென்றுகொண்டிருந்த பேருந்து ரோவா அருகே லாரி உடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
மத்திய பிரதேசத்தில் கோர விபத்து.... பேருந்தும் லாரியும் மோதிக் கொண்டதில் 15 பேர் உயிரிழப்பு... - பயங்கர சாலை விபத்து
மத்திய பிரதேசத்தில் பேருந்தும் லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். 39 பேர் படுகாயங்களுடன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் நடந்த பயங்கர சாலை விபத்தில் 15 பேர் உயிரிழப்பு
மத்திய பிரதேசத்தில் கோர விபத்து.... பேருந்தும் லாரியும் மோதிக் கொண்டதில் 15 பேர் உயிரிழப்பு...
இதானல் பேருந்தின் முன்பக்க பயணிகள் 15 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். 39 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்திவருகிறோம். முதல்கட்ட தகவலில் உயிரிழந்தவர்கள் உத்தரப் பிரதேசம், பிகார் மற்றும் நேபாளத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அவர்களின் குடும்பத்தாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: ஆந்திராவில் கடனை திருப்பி செலுத்தாத தொழிலாளியின் மனைவி கடத்தல்