கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி ஆளும் பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்து காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக மக்கள் மிக ஆபத்தான சூழலில் உயிருக்கு போராடி மடிந்துவருகின்றனர்.
மக்கள் மடிந்துவரும் சூழலில் விளம்பரங்கள் தேவையா: குமாரசாமி கண்டனம்
கோவிட்-19 காரணமாக மக்கள் மடிந்துவரும் சூழலில் அரசு விளம்பரங்கள் தேவையா என கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த சூழலிலும் மாநில அரசு மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து செய்தித்தாள்களில் முழு பக்க விளம்பரங்கள் கொடுத்து மக்கள் வரிப்பணத்தை வீணாக்குகிறது. மாநில மக்களுக்கு படுக்கை, ஆக்ஸிஜன், மருந்து தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில் கோடிக்கணக்கான பணத்தை இப்படி வீணடிப்பது முறையா. அரசின் இதுபோன்ற செயலை மக்கள் கவனித்துவருன்றனர். விளைவுகள் மோசமாகும் முன், அரசு தனது தவறை திருத்திக்கொள்ள வேண்டும் என எச்சரித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதிப்புகளும், நூறுக்கும் மேற்பட்ட உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.