தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஒட்டுக்கேட்பு: உச்ச நீதிமன்ற விசாரணைக்கோரி காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் - பெகாசஸ்

செல்பேன் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்த வலியுறுத்தி புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியினர் இன்று (ஜூலை 22) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி காங்கிரஸ் ஆர்பாட்டம்
புதுச்சேரி காங்கிரஸ் ஆர்பாட்டம்

By

Published : Jul 22, 2021, 5:19 PM IST

புதுச்சேரி: பெகாசஸ் என்னும் உளவுச் செயலியின் மூலம் உலகம் முழுவதும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், பத்திரிகையாளர்களின் செல்போன் தரவுகள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக வெளியான தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவிலும் 300க்கு மேற்பட்டோரின் செல்போன் தரவுகள் ஒட்டுக்கேட்கப்பட்டதாகத் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஜென்மராகினி மாதா கோயில் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் வைத்தியநாதன், ரமேஷ் பரமத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:'யாரிடமும் பேச முடியவில்லை' - மம்தாவை கடுப்பேற்றிய பெகாசஸ்

ABOUT THE AUTHOR

...view details