புட்கம்: மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி புட்கம் மாவட்டத்தில் நடந்த கட்சி பொதுக்கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 28) பேசினார். அப்போது அவர் கூறுகையில், “இந்தியாவும் பாகிஸ்தானும் பிராந்தியத்தில் அமைதியை விரும்பினால், அதை அடைய ஒரே வழி ஜம்மு-காஷ்மீர் மக்கள்தான்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வேறுபாடுகள் காரணமாக காஷ்மீர் பின்தங்கியுள்ளது. இதனால், இரு நாடுகளிலும் அமைதி நிலைநாட்டப்பட வேண்டும். இதுவே அனைவரின் விரும்பம்” என்றார்.
மேலும், “இரு நாடுகளும் மக்களுக்காகப் பேசும்போது காஷ்மீர் மக்களின் கண்ணியத்தையும் அடையாளத்தையும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்தியா, பாகிஸ்தான் அமைதியை அடைய ஒரே வழி காஷ்மீர்- மெகபூபா முப்தி தொடர்ந்து அவர் பேசுகையில், “காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், பிராந்தியத்தில் எந்த அமைதியும் இருக்க முடியாது. ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை விரைவில் மீட்டெடுக்க வேண்டும்” என்றும் கூறினார்.
இதையும் படிங்க: மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு, முதல்கட்ட வாக்குப்பதிவே சாட்சி- அர்ஜுன் முண்டா