தமிழ்நாடு

tamil nadu

பி.டி.பி. மூத்தத் தலைவர் நயீம் அக்தர் வீட்டுக் காவலிலிருந்து விடுவிப்பு

ஒரு மாதத்திற்கு மேலாக வீட்டுக் காவலிலிருந்து பி.டி.பி. மூத்தத் தலைவர் நயீம் அக்தர் நேற்று (ஜூன் 20) விடுவிக்கப்பட்டார்.

By

Published : Jun 21, 2021, 9:22 AM IST

Published : Jun 21, 2021, 9:22 AM IST

பி.டி.பி. தலைவர் நயீம் அக்தர் வீட்டுக் காவலிலிருந்து விடுவிப்பு
பி.டி.பி. தலைவர் நயீம் அக்தர் வீட்டுக் காவலிலிருந்து விடுவிப்பு

ஸ்ரீநகர்: ஒரு மாத காலத்திற்கு மேலாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்து பி.டி.பி. மூத்தத் தலைவர் நயீம் அக்தர் ஞாயிற்றுக்கிழமையன்று விடுவிக்கப்பட்டதாக அரசு அலுவலர்கள் தெரிவித்தனர்.

வரும் 24ஆம் தேதி பி.டி.பி., தேசிய மாநாடு உள்ளிட்ட ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முக்கியக் கட்சிகள் பங்கேற்கும் பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் நடைபெற உள்ள நிலையில், தற்போது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஸ்ரீநகர் சட்டப்பேரவை உறுப்பினர் விடுதியில் ஐந்து மாதங்களாகத் தடுப்புக் காவலில் தங்கவைக்கப்பட்ட நயீம் அக்தர் கடந்த மே 10ஆம் தேதி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவர் நேற்று (ஜூன் 20) வீட்டுக்காவலிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

அக்தர், சர்தாஜ் மட்னி உள்ளிட்ட பி.டி.பி. தலைவர்களும், தேசிய மாநாடு கட்சியின் தலைவர்களும் 2020 டிசம்பர் 21ஆம் தேதியன்று தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். இந்த நடவடிக்கை மாவட்ட மேம்பாட்டு கவுன்சில் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு ஒருநாள் முன்னதாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

முன்னதாக அக்தர் 2019 ஆகஸ்ட் மாதத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். பின்னர், அவர் மீது பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பி.டி.பி. தலைவர் நயீம் அக்தர் வீட்டுக் காவலிலிருந்து விடுவிப்பு

பத்து மாதங்களுக்குப் பிறகு 2020 ஜூனில் அவர் விடுவிக்கப்பட்டார், ஆனால் அதே ஆண்டு டிசம்பரில் மீண்டும் கைதுசெய்யப்பட்டார்.

பி.டி.பி. தலைவர் மெகபூபா முஃடியின் உறவினரான மட்னி சனிக்கிழமையன்று (ஜூன் 19) தடுப்புக் காவலிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

ஜூன் 24 அன்று பிரதமர் தலைமையிலான பேச்சுவார்த்தையில் பி.டி.பி. கட்சி கலந்துகொள்வதற்கான அழைப்பு குறித்து முடிவெடுக்க மெஹபூபாவுக்கு ஞாயிற்றுக்கிழமையன்று (ஜூன் 20) அக்கட்சி அதிகாரம் அளித்தது.

ABOUT THE AUTHOR

...view details