தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Paytm QR code வைத்து டிப்ஸ் வாங்கிய நீதிபதி உதவியாளர் சஸ்பெண்ட் - அலகாபாத் உயர் நீதிமன்றம்

அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதி உதவியாளர் Paytm QR code பயன்படுத்தி வக்கீல்களிடம் இருந்து டிப்ஸ் வாங்கியது கண்டுபிடித்ததையடுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

Etv Bharatபேடிஎம் க்யூஆர் கோடை வைத்து டிப்ஸ் வாங்கிய நீதிபதி உதவியாளர்  - சஸ்பெண்ட் செய்த உயர் நீதிமன்றம்
Etv Bharatபேடிஎம் க்யூஆர் கோடை வைத்து டிப்ஸ் வாங்கிய நீதிபதி உதவியாளர் - சஸ்பெண்ட் செய்த உயர் நீதிமன்றம்

By

Published : Dec 2, 2022, 10:44 AM IST

Updated : Dec 2, 2022, 1:10 PM IST

அலகாபாத்: உயர் நீதிமன்றத்தில் நீதிபதிக்கு உதவியாளராக பணிபுரியும் ராஜேந்திர குமார் வழக்கு வாதாட வரும் வக்கீல்களிடமிருந்து டிப்ஸ் வாங்குவதாக புகார் எழுந்தது.

இது குறித்து நீதிபதி அஜித் குமார் அலகாபாத் உயர் நீதிமன்றம் தலைமை நீதிபதியிடம் புகார் அளித்தார். மேலும் ராஜேந்திர குமார் ரொக்கமாக டிப்ஸ் வாங்கினால் பிரச்சனை எழும் என, பேடிஎம் க்யூஆர் கோடு மூலம் டிப்ஸ் வாங்கி வந்தது தெரியவந்தது.

கடந்த சில தினங்களாக இடுப்பில் பேடிஎம் க்யூஆர் கோடை சொருகி வைத்திருக்கும் ஒரு நீதிபதி உதவியாளரின் புகைப்படம் சமூக வலைத் தளங்களில் வைரலானது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் ராஜேந்திர குமாரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தது.

இதையும் படிங்க:டெல்லியில் தலைமறைவு பயங்கரவாதி கைது

Last Updated : Dec 2, 2022, 1:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details