தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உத்தரகாண்ட் பேருந்து விபத்து ; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மூன்று பேர்...! - பேருந்து விபத்து

உத்தரகாண்டில் நடந்த பேருந்து விபத்தில் 33 பேர் உயிரிழந்த நிலையில், இறுதி நேரத்தில் பயணத்தை ரத்து செய்த மூன்று பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

உத்தரகாண்ட் பேருந்து விபத்து ; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மூன்று பேர்...!
உத்தரகாண்ட் பேருந்து விபத்து ; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மூன்று பேர்...!

By

Published : Oct 7, 2022, 9:06 AM IST

Updated : Oct 7, 2022, 11:17 AM IST

உத்தரகாண்ட்:இரண்டு நாட்களுக்கு முன்பு பவுரி மாவட்டத்தில் நடந்த பேருந்து விபத்தில் 33 பேர் உயிரிழந்தனர். திருமண நிகழ்ச்சிக்காக பிரோன்கல் அருகே கந்தா கிராமத்திற்கு கடந்த புதன் கிழமையன்று 50 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் அன்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து உயிரிழந்தவரகளின் 12 பேரின் உடல்கள் ஒன்றாக அடக்கம் செய்யப்பட்டது.

இதுகுறித்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கூறுகையில், “இங்கு சாலை பராமரிப்பு சரியாக நிர்வகிக்கப்படவில்லை.

அரசியல் தலைவர்கள் ஓட்டு கேட்க மட்டுமே வருகிறார்கள். வாக்களிக்கவில்லையென்றால் உங்களின் ரேசன் அட்டை நிராகரிக்கப்படும் என அச்சுறுத்துகிறார்கள். நாங்களும் அதற்கு பயந்து வாக்களித்து விடுவோம். நாங்கள் வாழும் கிராமத்தைப் பற்றி யாரும் அக்கறை கொள்வதில்லை” என வேதனை தெரிவித்தனர்.

இந்த விபத்தில் மூன்று பேர் மட்டும் சிக்காமல் உயிர் தப்பியுள்ளனர். இவர்கள் கடைசி நேரத்தில் ஏதோ சில காரணங்களால் அந்தப் பேருந்தில் அன்று பயணிக்காமல் இருந்துள்ளனர் . இவர்கள், நரேந்திர நாத் சிங் மற்றும் அவரது நண்பர்களான ஸ்ரீசந்த் மற்றும் பிரதாப் சிங் .

இதுகுறித்து நரேந்திர நாத் சிங் கூறுகையில், “நாங்கள் பயணம் செய்ய இருந்த நாளில் என் மாமனார் திடீரென இயற்கை எய்தினார். அதுகுறித்து தகவலறிந்ததும், நானும் என் நண்பர்களும் அந்தப் பேருந்து பயணத்தை ரத்து செய்துவிட்டு வீட்டிற்கு திரும்பினோம்” என்றார்.

இதையும் படிங்க: குழந்தையை கடத்திய சாதுக்கள்...தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

Last Updated : Oct 7, 2022, 11:17 AM IST

ABOUT THE AUTHOR

...view details