பீகார்:பாட்னாவின் கோன்புரா கிராமத்தைச் பிரேம் குமார்(17) என்ற மாணவர் தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தில், மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை தினக்கூலியாக இருக்கிறார்.
இந்த நிலையில், அமெரிக்காவின் புகழ்பெற்ற லஃபாயெட் கல்லூரியில் படிப்பதற்கான இரண்டரைகோடி ரூபாய் ஸ்காலர்ஷிப்பை (Dyer Fellowship) பிரேம் பெற்றுள்ளார். இரண்டரை கோடி ரூபாய் உதவித்தொகையுடன், லஃபாயெட் கல்லூரியில் இளங்கலை படிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. முதல் பட்டதாரியான பிரேமின் விடா முயற்சியாலும், திறமையாலும் இந்த வாய்ப்பை பெற்றுள்ளார்.
இயந்திரவியல் மற்றும் பன்னாட்டு உறவுகள் ஆகியவற்றை படிக்கவுள்ளார். மேலும், படிப்பு செலவு, பயணச் செலவு, தங்குமிடம் உள்ளிட்ட அனைத்து தேவைகளும் இந்த உதவித்தொகையில் அடங்கும். இதுவரை உலகளவில் இந்த ஸ்காலர்ஷிப்பை 6 மாணவர்கள் மட்டுமே பெற்றுள்ளனர்.
இந்தியாவில் இந்த ஸ்காலர்ஷிப்பை பெறும், முதல் தாழ்த்தப்பட்ட சமூக மாணவர் பிரேம்தான். பீகாரில், தாழ்த்தப்பட்ட சமூக குழந்தைகளுக்காக பாடுபடும், டெக்ஸ்டெரிட்டி குளோபல் என்ற அமைப்பு, பிரேமை அடையாளம் கண்டு, அவருக்கு பயிற்சி அளித்துள்ளது.