ஜல்கான்: பாடலிபுத்ர எக்ஸ்பிரஸ் ரயில், மும்பையிலிருந்து பாட்னா சென்று கொண்டிருந்தது. ரயில் மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் சென்று கொண்டிருந்தபோது, இரண்டு ரயில் பெட்டிகள் திடீரென தனியாக பிரிந்துவிட்டன.
இதனால் பயணிகள் பதற்றமடைந்தனர். சாலிஸ்கான் மற்றும் வாக்லி ரயில் நிலையங்களுக்கு இடையே இந்த சம்பவம் நடந்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.