கர்நாடகத்தில், இரண்டு பேருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், வெளிநாடு செல்லாத மயக்கமருந்து மருத்துவருக்கு ஒமைக்ரான வந்தது எப்படி என்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது.
ஜிம்பாப்வே நாட்டிலிருந்து குஜராத் ஜம்நகர் வந்தவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை குஜராத் மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. இதன் மூலம், இந்தியாவில் ஒமைக்ரான் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்திருந்தது.