டேராடூன்: ஜார்கண்ட் மாநிலம் ஜம்தாரா மாவட்டத்தில் வசித்து வந்தவர் துக்வான் மஹேதா. இவருக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, டும்ரி ரெஃபரல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையின்போது அவருக்கு அதிகப்படியான மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவர்கள் அவருக்கு ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் சிகிச்சை அளித்துவந்தனர்.
இதனிடையே மருத்துவமனையில் திடீரென மின் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆக்சிஜன் கிடைக்காமல் மஹேதா மூச்சுத்திணறால் அவதிப்பட்டார். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் தரப்பில், போதிய அளவிலான டீசல் இல்லை என்றும், ஜெனரேட்டரை இயக்க சிறிது நேரம் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.