புதுச்சேரி கணபதிசெட்டிக்குளம் தனியார் மருத்துவமனையில் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த ருத்ர குமார்(45) கடந்த ஒரு வார காலமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இவர் மருத்துவமனையின் நான்காவது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த இறந்தவரின் உறவினர்கள் மருத்துவமனை அலுவலர்களை சந்தித்து விளக்கம் கேட்டனர். அதற்கு அலுவலர்கள் பதில் அளிக்க மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.