கேரளா: துபாயிலிருந்து நேற்று (செப்டம்பர் 10) கேரள மாநிலம் கொச்சின் நோக்கி புறப்பட்ட விமானத்தில் பயணித்த பெண் ஒருவர் நடுவானில் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அவருக்கு விமானத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்டது. அதன்பின் கொச்சின் விமான நிலையத்திற்கு வந்த உடன் அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
நாடு வானில் விமானத்தில் மயங்கி விழுந்த பயணி உயிரிழப்பு - துபாய் விமானம்
துபாயில் இருந்து கொச்சின் வந்த விமானத்தில் பெண் பயணி ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
விமானத்தில் மயங்கி விழுந்த பயணி உயிரிழப்பு
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் முன்னதாகவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதனை கேட்டு அதிர்ந்து போன விமான நிலைய ஊழியர்கள், இதுகுறித்து போலீசாருக்கும் பயணியின் குடும்பத்தாருக்கும் தகவல் கொடுத்தனர். அதனடிப்படையில் மருத்துவமனைக்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதையும் படிங்க: பிரபல தெலுங்கு நடிகர் கிருஷ்ணம் ராஜூ காலமானார்