தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்து 11 பேர் உயிரிழப்பு

உத்தர பிரதேசத்தின் யமுனை ஆற்றில் பயணிகள் சென்ற படகு கவிழ்ந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.

யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்து 11 பேர் உயிரிழப்பு
யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்து 11 பேர் உயிரிழப்பு

By

Published : Aug 13, 2022, 11:56 AM IST

லக்னோ: உத்தர பிரதேசத்தின் ஃபதேபூர் மாவட்டத்தின் யமுனை ஆற்றில் படகு போக்குவரத்து சேவை நடைபெற்று வருகிறது. இதில், மார்க் என்னும் பகுதியில் இருந்து ஜரௌலி காட் பகுதி நோக்கி நேற்று முன்தினம் (ஆக. 13) 30 பேர் அமரும் வகையிலான படகு சென்றுள்ளது.

அப்போது, பலத்த காற்று காரணமாக ஏற்பட்ட பெரிய அலையினால் அப்படகு கவிழ்ந்தது.படகில் 30-35 பேர் பயணித்தாக கூறப்படும் நிலையில், ஆற்றில் மூழ்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மீட்புப்பணியில் பயிற்சி பெற்ற நீச்சல்காரர்கள் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

நேற்று 13 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், மூன்று பேரின் உடல் சடலமாக இன்று மீட்கப்பட்டது. இன்றும் தொடர்ந்த மீட்புப்பணியில் மேலும் 8 பேரின் உடலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை ஆகியவை முதலமைச்சர் யோகியின் உத்தரவின் பேரில் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகிறது.

மேலும், அரசின் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தில் முகாமிட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி அளிக்க அருகிலேயே மருத்துவ முகாம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

இதையும் படிங்க:இறுதிச் சடங்குக்காக ஆற்றில் இறங்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

ABOUT THE AUTHOR

...view details