குஜராத்:சுரேந்திரநகர் மாவட்டம் வஸ்தாடி பகுதியில் உள்ள சுரா தாலுகாவுடன் தேசிய நெடுஞ்சாலையை இணைக்க பாலம் ஒன்று அமைக்கப்பட்டிருந்துள்ளது. இப்பாலம் கட்டி சுமார் 40 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. மேலும் இப்பாலத்தின் கட்டமைப்பில் கோளாறு இருந்ததாகவும், ஆகையால் அதிக எடையுள்ள கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தினமும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வானகம் என ஏராளமான வாகனங்கள் இப்பாலத்தில் சென்று வருகின்றனர். இந்த நிலையில், நேற்று (செப்.24, ஞாயிற்றுக்கிழமை) வழக்கம் போல் பாலத்தில் வாகனங்கள் சென்று கொண்டிருந்த போது, பாலம் திடீரென இரண்டு துண்டாக இடிந்து விழுந்துள்ளது.
பாலம் இடிந்து விபத்துக்குள்ளானதில், பாலத்தின் மேல் சென்று கொண்டிருந்த குப்பை பாரம் ஏற்றிச் சென்ற சரக்கு லாரி, இரு சக்கர வாகனம் உள்ளிட்டவை ஆற்றில் விழுந்துள்ளது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் ஆற்றில் மூழ்கியவர்கள் மீட்கும் பணியில் துரிதமாக ஈடுபட்டு பத்திரமாக மீட்டனர். பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.