தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ட்விட்டர் ஊழியர்களிடம் நாடாளுமன்றக் குழு கிடுக்கிப்பிடி விசாரணை - இந்தியாவில் புதிய ஐடி விதிகள்

புதிய ஐடி விதிகளைப் பின்பற்றுவது தொடர்பாக ட்விட்டர் நிறுவன ஊழியர்களிடம் நாடாளுமன்றக் குழு கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டது.

Twitter
Twitter

By

Published : Jun 18, 2021, 10:53 PM IST

ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை அனைத்து சமூக வலைதளங்களும் பின்பற்ற வேண்டும் என்ற நிபந்தனையை ட்விட்டர் நிறுவனம் முழுமையாக பின்பற்ற மறுத்து வருகிறது.

இது தொடர்பாக ட்விட்டர் இந்தியா நிறுவன அலுவலர்கள், நேரில் ஆஜராகி விளக்கமளிக்க நாடாளுமன்றக் குழு முன்னதாக உத்தரவிட்டது. இதையடுத்து ட்விட்டர் நிறுவன அலுலவர்கள் விசாரணைக்கு இன்று (மே.18) ஆஜராகினர்.

அப்போது தங்களது நிறுவனக் கொள்கையின்படியே செயல்பட்டு வருகிறோம் என நிறுவனம் விளக்கம் தெரிவித்தது. இதற்கு பதிலளித்த நாடாளுமன்றக் குழு, ”நாட்டின் விதிகள்தான் பிரதானமே தவிர, உங்கள் கொள்கை அல்ல” என அறிவுறுத்தியுள்ளது.

இது தொடரும் பட்சத்தில் நிறுவனத்தின் மீது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:தடுப்பூசியில் எதிர்க்கட்சிகள் அரசியல்!

ABOUT THE AUTHOR

...view details