டெல்லி: நாடாளுமன்ற மாநிலங்களவை மற்றும் மக்களவையில் இருந்து 143 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம் 'இந்தியா' கூட்டணி கட்சிகள் மட்டுமில்லாது அனைத்து தரப்பினர் இடையேயும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத்தொடர்ந்து, மாநிலங்களவை மற்றும் மக்களவையில் இருந்து 143 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக தலைமையிலான மத்திய அரசை கண்டித்தும் இந்தியா கூட்டணி தலைமையிலான எதிர்க்கட்சி எம்பிக்கள் டெல்லியில் நாடாளுமன்ற மாளிகையில் இருந்து விஜய் சவுக் வரை பேரணியாக செல்ல உள்ளனர்.
கடந்த டிச.13 ஆம் தேதி நாடாளுமன்றத்தின் மக்களவையில் குளிர்கால கூட்டத்தொடரில் பூஜ்ஜிய நேரத்தின் போது, பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கைகளில் குதித்து ஓடியபடி குப்பிகளில் இருந்து மஞ்சள் நிறப் புகையை வெளியேற்றிய சம்பவம் அரங்கேறியது. இது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் இருந்து அறிக்கை வெளியிடக் கோரியதற்காக சலசலப்பு எழுப்பியதற்காக ஆரம்பத்தில் சில உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இதனையடுத்து, நாடாளுமன்றத்தில் இன்று (டிச.21) குளிர்கால கூட்டத்தொடரின் 14வது நாள் கூட்டத்தில் மேலவையில் நிறைவேற்றப்பட்ட காலனித்துவ கால குற்றவியல் சட்டங்களை மாற்றுவதற்கான மூன்று மசோதாக்கள் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளன. இதைத்தொடர்ந்து, மக்களவையில் 97 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கான வரைவு சட்டங்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.
அதோடு, கேரள காங்கிரஸின் (மணி) தாமஸ் சாழிகடன் மற்றும் சிபிஐ(எம்)-ன் ஏ.எம்.ஆரிஃப் ஆகிய எதிர்க்கட்சியின் இரண்டு உறுப்பினர்கள் தவறான நடந்ததாகக் கூறி, மக்களவையில் இருந்து நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதன்மூலம் கீழவை உறுப்பினர்கள் 97 பேரும், மேலவை உறுப்பினர்கள் 46 பேரும் என வெளியேற்றப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை 143 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று நடந்த கூட்டத்தில் பிரட்டிஷ் கால குற்றவியல் சட்டங்களுக்குப் பதிலாக மூன்று மசோதாக்கள் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன்படி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாரதிய நியாயா (இரண்டாவது) சன்ஹிதா மசோதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா (இரண்டாவது) சன்ஹிதா மசோதா மற்றும் பாரதிய சக்ஷ்யா (இரண்டாவது) சட்டங்கள் என்று அறிமுகம் செய்தார்.