தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல்; 5 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை செய்ய டெல்லி நீதிமன்றம் ஒப்புதல்! - Latest Tamil News

Parliament security breach: 2023ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி நாடாளுமன்ற பாதுகாப்பு மீறலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட 6 நபர்களின் காவலை 8 நாட்கள் நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

parliament-security-breach-five-of-six-accused-give-consent-for-polygraph-test
நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல்; உண்மையை கண்டறியும் சோதனை செய்ய நீதிமன்றம் ஒப்புதல்..

By PTI

Published : Jan 5, 2024, 7:30 PM IST

டெல்லி:நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 6 நபர்களில் 5 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை செய்ய இன்று (ஜனவரி 5) ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

2001ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலின் நினைவு நாளில், கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நாடாளுமன்ற கூட்டம் நடைபெறும்போது, சாகர் சர்மா மற்றும் மனோரஞ்சன் ஆகிய இருவரும் பாதுகாப்பை மீறி வாயு நிறைந்த குப்பியை வீசினர்.

அதே நேரத்தில் நாடாளுமன்ற கட்டடத்தின் வெளியே அமோல் ஷிண்டே மற்றும் ஆசாத் ஆகிய இருவரும் வாயு நிறைந்த குப்பியை வீசி அத்துமீறலில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக மனோரஞ்சன் டி, சாகர் ஷர்மா, அமோல் தன்ராஜ் ஷிண்டே, நீலம் ஆசாத், லலித் ஜா மற்றும் மகேஷ் குமாவத் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு, டெல்லி காவல் துறையின் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் காவல் நீட்டிப்பு மற்றும் உண்மை கண்டறியும் சோதனையில் ஈடுபடுத்துவது தொடர்பாக டெல்லி நீதிமன்ற நீதிபதி ஹர்தீப் கவுர் முன்பு 6 நபர்களும் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவில், 6 பேரின் காவலை 8 நாட்கள் நீட்டித்து உத்தரவிட்டார். மேலும் 6 நபர்களில் 5 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க:பன்னாட்டு விமான நிலையமாக அயோத்தி.. புதிய பெயருடன் ஒப்புதல் அளித்த மத்திய அமைச்சரவை!

ABOUT THE AUTHOR

...view details