சமூக மற்றும் கல்விரீதியாக பின்தங்கியுள்ள இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் எவை என்பதைக் கண்டறியும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது, மாநில அரசுகளுக்கு இல்லை என கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை சீர்செய்யும் விதமாக, சமூகம் மற்றும் கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்ட சமூகங்களை தயார் செய்யும் அதிகாரம் மாநிலங்களுக்கே திரும்ப அளிக்க 127ஆவது அரசியல் சாசன சட்டதிருத்த மசோதாவை மோடி தலைமையிலான அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.
பெகாசஸ் உள்ளிட்ட விவகாரங்களை காரணம் காட்டி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கிவந்த நிலையில், இந்த ஓபிசி இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் அனைத்துக் கட்சி ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், இன்று மாலை மாநிலங்களவையிலும் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு, எதிர்க்கட்சிகள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்ற இரு அவைகளிலும் இம்மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையில், குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு மசோதா அனுப்பப்பட்டது.
இதையும் படிங்க:தடுப்பூசி போடனும், இல்லன கரோனா டெஸ்ட் எடுக்கனும் - கேரள மதுப்பிரியர்களுக்கு கெடுபிடி