தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர்: இந்தியாவா? என்.டி.ஏ.வா? என்ன நடக்கப் போகிறது? - Tomorrow Parliament Monsoon session starts

நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடர் நாளை (ஜூலை. 20) தொடங்குகிறது. நடப்பு கூட்டத் தொடரில் 31 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேநேரம் மணிப்பூர் கலவரம், டெல்லி அவசரச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Parliament
Parliament

By

Published : Jul 19, 2023, 8:45 PM IST

டெல்லி :நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடர் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நாளை தொடங்க உள்ள நிலையில், மணிப்பூர் கலவரம், டெல்லி அவசரச் சட்டம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்டரல் விஸ்டா திட்டத்தில் புதிதாக நாடாளுமன்றம் கட்டடப்பட்ட நிலையில், கடந்த மே மாதம் 28ஆம் தேதி அதன் திறப்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. பிரதமர் மோடி புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறந்து வைத்தார். நடப்பு நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடர் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக உள்ளிட்ட 26 எதிர்க் கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற இந்திய தேசிய வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த கூட்டணியை அமைத்து உள்ளன. கடந்த இரண்டு தினங்களாக கர்நாடக தலைநகர் பெங்களூருவில் கூடிய 26 எதிர்க்கட்சிகள் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தங்களுக்குள் பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றிக் கொண்டன.

மறுபுறம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்று (ஜூலை. 18) நடைபெற்றது. தமிழகத்தின் அதிமுக, பாமக, தாமக உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள 38 கட்சிகள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இரு பிரிவுகளாக கட்சிகள் பிரிந்து காணப்படும் நிலையில், நாளை (ஜூலை. 20) நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடர் தொடங்குகிறது. நடப்பு கூட்டத் தொடரில் மணிப்பூர் கலவரம், டெல்லி அவசரச் சட்டம், அதானி விவகாரத்தில் அனைத்துக் கட்சிகள் அடங்கிய ஆலோசனைக் குழு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்றக் மழைக் கால கூட்டத் தொடருக்கு முன்னதாக அனைத்து கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் விதிகளின் கீழ் அனுமதிக்கப்பட்ட மற்றும் அவைத் தலைவரால் அங்கீகரிக்கப்பட்ட ஒவ்வொரு பிரச்சினையையும் விவாதிக்க தயாராக இருப்பதாக பல்வேறு கட்சிகளின் தலைவர்களிடம் தெளிவுபடுத்தியதாக நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்து உள்ளார்.

மேலும் அனைத்து கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் 34 கட்சிகளை சேர்ந்த 44 தலைவர்கள் கலந்து கொண்டதாக அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்து உள்ளார். அகஸ்ட் 11ஆம் தேதியுடன் மழைக் கால கூட்டத் தொடர் முடிவடைய உள்ள நிலையில், ஏறத்தாழ 31 மசோதாக்களை இந்த அமர்வில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

டெல்லி அவசரச் சட்டம், தனி நபர் தகவல் பாதுகாப்பு மசோதா, பொது சிவில் சட்டம், டிஜிட்டல் தகவல் பாதுகாப்பு மசோதா, ரயில்வே, தபால் துறை திரைத்துறை கதை திருட்டு தடுப்பு வரைவு மசோதா உள்ளிட்ட 31 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க :இன்ஸ்டாகிராம் காதல்.. காதலனை மணக்க 6வயது மகளுடன் ஜார்கண்ட் வந்த போலந்து பெண்!

ABOUT THE AUTHOR

...view details