டெல்லி: பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டுவந்ததால், மாநிலங்களவை 1 மணிவரையும், மக்களவை 2 மணிவரையும் ஒத்திவைக்கப்பட்டது.
இதன்பின்னர், 1 மணிக்கு பின்னர் மாநிலங்களவை கூடியது. அப்போது, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள், விஜய்சாய் ரெட்டி எம்பி தலைமையில் ஆந்திராவிற்குச் சிறப்புத் தகுதி அளிக்க வேண்டும் என்ற கோஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.
மாநிலங்களவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங், அமளியில் ஈடுபட்டவர்களிடம் அமைதியாக இருக்கும்படி பலமுறை கேட்டுக்கொண்டார்.
கரோனா குறித்து விவாதம்?
இதன்பின் பேசிய பாஜக மாநிலங்களவைத் தலைவரும், ஒன்றிய அமைச்சருமான பியூஷ் கோயல், "உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா தொற்றின் பாதிப்பு குறித்து விவாதிக்க இந்த அவை அனுமதிக்க வேண்டும்.