டெல்லி: ஜி20 சர்வதேச உச்சி மாநாடு 2023ல் நடைபெற உள்ளது. அதை மனதில் வைத்து புதுடெல்லி, சாணக்யபுரியில் சிறப்பு பூங்காவை உருவாக்க உள்ளது. இந்த பூங்கா முழுமையாக ஜி-20 நாடுகளுக்கு அர்ப்பணிக்கப்படும். இது வேஸ்ட் டு வொண்டர் என்ற கருப்பொருளில் அமைக்கப்பட உள்ளது. சோலார் ஆற்றல் மூலம் ஒளிரும் விளக்குகள் மூலம் பூங்காவில் அலங்கரிக்கப்பட உள்ளது.
ஜி-20 நாடுகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில், அனைத்து நாடுகளின் தேசியக் கொடிகளும், கழிவுகளால் செய்யப்பட்ட தேசிய விலங்குகளின் உருவங்களும் பூங்காவில் காட்சிப்படுத்தப்படும். இதனுடன், ஜி20 நாடுகளை கவுரவிக்கும் வகையில் சிறப்பு உணவு திருவிழாவும் நடத்தப்படும்.
இதைக் கருத்தில் கொண்டு, புதுடெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் புதன்கிழமை பட்ஜெட்டை வெளியிட்டது. வரவிருக்கும் 2023-24 நிதியாண்டு மிக முக்கியமானதாக இருக்கும் என்று கூறியது. ஏனெனில், இந்த நிதியாண்டில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஜி20 சர்வதேச உச்சி மாநாடு நடைபெற உள்ளது.