ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில், 20 வயதுடைய ஒரு இளம்பெண் தான் காதலித்தவரை திருமணம் செய்துகொள்ள விரும்பியதால், அப்பெண்ணின் பெற்றோர் அதை நிராகரித்து அவள் மீது தீ வைத்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சையுடன், காவலர்களிடம் இளம்பெண் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
இது குறித்து, ராயச்சிட்டி வட்ட ஆய்வாளர் ராஜு கூறுகையில், "ராயச்சோட்டி நகரத்தின் கோத்தப்பள்ளி பகுதியைச் சேர்ந்த 20 வயதான தாசிம் எங்களிடம் அளித்த அறிக்கையில், தனது திருமணத்திற்காக அவரது பெற்றோர் நீண்ட காலமாக வரன்களை தேடிக்கொண்டிருப்பதாகக் கூறினார். ஆனால், அவர் அனைத்தையும் நிராகரித்தார். ஏனெனில், தான் ஒருவரை காதலித்ததாக பெற்றோரிடம் கூறியுள்ளார்.