உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரைச் சேர்ந்த வயதான தம்பதி, மாவட்ட நீதிமன்றத்தில் வித்தியாசமான வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளனர். அதில், "தங்களது மகனுக்கு கடந்த 2016-ம் ஆண்டு திருமணமானதாகவும், மகனும் மருமகளும் நொய்டாவில் தங்கி பணிபுரிவதாகவும் தெரிவித்துள்ளனர்.
தனது மொத்த சேமிப்பையும் செலவழித்து மகனுக்கு அமெரிக்காவில் விமானியாக பயிற்சி அளித்ததாகவும், அவர் தற்போது முழுநேர வேலையில் மூழ்கி தங்களை மறந்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். வயதான காலத்தில் தாங்கள் தனியாக வாழ்ந்து வருவதாகவும், தங்களுக்கு பேரக்குழந்தைகளை பெற்றுத் தர மகனும் மருமகளும் எந்தவித முயற்சியும் எடுக்காமல் அலட்சியமாக இருக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.