புதுச்சேரி: கரோனா தொற்றுப் பரவல் காரணமாக இன்றளவும் பள்ளிகளைத் திறக்க அரசு தயக்கம் காட்டிவருகிறது. இதனால் தனியார் பள்ளிகள், மாணவர்களுக்கான பாடங்களை ஆன்லைன் வகுப்பு மூலமாகப் பயிற்றுவித்துவருகின்றன.
ஆனால், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எதுவும் நடத்தப்படவில்லை. இதனால் பெரும்பாலான மாணவர்கள் தெருக்களில் விளையாடி நேரத்தை வீணடிக்கும் செயலிலேயே ஈடுபடுகின்றனர். சிலர் குற்றச் சம்பவங்களில்கூட ஈடுபடுகின்றனர்.
மேலும் புதுச்சேரி அரசுப் பள்ளியில் பயிலும் பல மாணவர்களுக்கு, ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ள ஆர்வம் இருந்தும் அலைபேசி வாங்க வசதியில்லை. சிலர் உணவுக்கே பரிதவித்துவருகின்றனர்.