தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அந்தமான் மற்றும் நிக்கோபாரில் பெயரிடப்படாத 21 தீவுகளுக்கு வீரர்களின் பெயர் சூட்டிய பிரதமர் - 21 தீவுகள்

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் பெயரிடப்படாத 21 பெரிய தீவுகளுக்குப் பரம் வீர் சக்ரா விருது பெற்ற 21 வீரர்களின் பெயரை சூட்டும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

By

Published : Jan 23, 2023, 8:51 AM IST

Updated : Jan 23, 2023, 11:43 AM IST

போர்ட் பிளேயர்: அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் பெயரிடப்படாத 21 பெரிய தீவுகளுக்குப் பரம் வீர் சக்ரா விருது பெற்ற 21 வீரர்களின் பெயரை சூட்டும் நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜனவரி 23) காணொலிக்காட்சி மூலம் கலந்துகொண்டார். இந்த நிகழ்வின் போது, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவில் கட்டப்படவுள்ள நேதாஜிக்கு அர்ப்பணிக்கப்படும் வகையிலான தேசிய நினைவகத்தின் மாதிரியையும் திறந்து வைத்தார்.

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் வரலாற்று முக்கியத்துவத்தை மனதில் கொண்டு, நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் நினைவை போற்றும் வகையில், 2018ஆம் ஆண்டு அங்கு சென்ற பிரதமர் மோடி ராஸ் தீவுகளுக்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தீவு என பெயர் மாற்றம் செய்துவைத்தார். நீல் தீவு மற்றும் ஹேவ்லாக் தீவு ஷாஹீத் தீவு மற்றும் ஸ்வராஜ் தீவு என மறுபெயரிடப்பட்டது.

இதனை தொடர்ந்து அவரது பிறந்த நாளில், அங்குள்ள 21 பெரிய பெயரிடப்படாத தீவுகளுக்கு பரம் வீர் சக்ரா விருது பெற்ற 21 பேரின் பெயரைச் சூட்ட முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில் பெயரிடப்படாத மிகப்பெரிய தீவுக்கு முதல் பரம் வீர் சக்ரா விருது பெற்றவரின் பெயரும், இரண்டாவது பெரிய பெயரிடப்படாத தீவுக்கு இரண்டாவது பரம் வீர் சக்ரா விருது பெற்றவரின் பெயரும் சூட்டப்படப்பட்டது. அதன்பின் 19 தீவுகளுக்கும் அடுத்தடுத்து விருது பெற்றவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டது.

அந்த வரையில் மேஜர் சோம்நாத் சர்மா, கேப்டன் கரம் சிங், கேப்டன் ஜி.எஸ். சலாரியா, லெப்டினன்ட் கர்னல் தன் சிங் தாபா, சுபேதார் ஜோகிந்தர் சிங், மேஜர் ஷைத்தான் சிங், அப்துல் ஹமீத், லெப்டினன்ட் கர்னல் அர்தேஷிர் புர்சோர்ஜி தாராபூர், லான்ஸ் நாயக் ஆல்பர்ட் எக்கா, மேஜர் ஹோஷியார் சிங், லெப்டினன்ட் கார்னல் நிர்மல்ஜித் சிங் செகோன், மேஜர் ராமசுவாமி பரமேஸ்வரன், நைப் சுபேதார் பானா சிங், கேப்டன் விக்ரம் பத்ரா, லெப்டினன்ட் மனோஜ் குமார் பாண்டே, சுபேதார் மேஜர், சஞ்சய் குமார் ஆகியேரது பெயர்கள் தீவுகளுக்கு சூட்டப்பட்டன.

இதையும் படிங்க: குஜராத் மாநில பொங்கல் விழாவில் ஓபிஎஸ் பங்கேற்பு

Last Updated : Jan 23, 2023, 11:43 AM IST

ABOUT THE AUTHOR

...view details