ஜெய்ப்பூர்:ராஜஸ்தான் மாநிலம்கோட்டாவில் உள்ள குடியிருப்பு பகுதியில் சிறுத்தை ஒன்று நடமாடியுள்ளது. அப்போது அந்த பகுதியில் உள்ள ஹரிசங்கர் என்பவது வீட்டிற்குள் இன்று (நவ.5) நுழைந்துள்ளது. அப்போது உரிமையாளர் ஹரிசங்கர் அவரது மனைவி மீனாவை தாக்கியது. இருப்பினும்ஹரிசங்கர் நூதனமாக சிறுத்தையை வீட்டிற்குளேயே வைத்து தாழிட்டு பூட்டினார். அதன்பின் வனத்துறைக்கு தகவல் கொடுத்தார்.
ஜெய்ப்பூரை அச்சுறுத்திய சிறுத்தை வீட்டிற்குள் லாக் - குவிந்த பொதுமக்களால் திணறிய வனத்துறை
ராஜஸ்தான் மாநிலத்தில் வீட்டிற்குள் நுழைந்த சிறுத்தையை உரிமையாளர் தாழிட்டு பூட்டினார்.
Etv Bharat
இதனிடையே அவரையும் மீனாவையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அதோடு அங்கு ஏராளமான பொதுமக்கள் குவிந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசாரும், வனத்துறையும் அங்கு விரைந்து சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ஆர்டிஐ மனுவிற்கு 8500 பக்கத்தில் பதில் - மாட்டு வண்டி கட்டி எடுத்துச்சென்ற ஆர்வலர்