இந்தியாவில் கோவிட்-19 தடுப்பூசி பயன்பாட்டிற்கு கொண்டுவருவது குறித்து, நிதி ஆயோக் அமைப்பின் சுகாதாரத் துறை அலுவலர் வி.கே. பால் செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார்.
அதில், ”கோவிட்-19 தடுப்பூசி பெறவேண்டிய நபர்களை முன்னுரிமையின் அடிப்படையில் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
வரும் ஜூலைக்குள் சுமார் 30 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதே இலக்காகும். முதற்கட்டமாக சுகாதாரத் துறை ஊழியர்கள், முன்கள பணியாளர்கள், அதன் பின்னர் 50 வயதுக்கு மேல் உள்ள நபர்கள் என முன்னுரிமை பட்டியிலடப்பட்டு இந்த தடுப்பூசி வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.