இந்தியாவில் பெண்களுக்கான திருமண வயதை உயர்த்துவது குறித்து மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்துவருகிறது. கடந்த சுதந்திர தின விழாவின் போது இதை பிரதமர் நரேந்திர மோடியும் குறிப்பிட்டு பேசினார். பெண்களின் திருமண வயதை உயர்த்துவது குறித்து பரிசீலிக்க குழு ஒன்றை அரசு நியமித்துள்ளது. மேலும், இந்த குழுவின் அறிக்கையை பரிசீலித்த பின்னர், மத்திய அரசு முடிவெடுக்கும் என தெரிவிக்கப்பட்டது.
ஜெயா ஜெய்ட்லி தலைமையில் அமைக்கப்பட்ட இந்தக் குழு, இதுகுறித்த விரிவான அறிக்கையை பிரதமர் அலுவலகம், பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்திடம் ஒப்படைத்துள்ளது. இதில் பரிந்துரைகள் அவற்றை அமல்படுத்தவதற்கான வழிமுறைகளை நிபுணர் குழு விரிவாக தெரிவித்துள்ளது.